அஜித்தின் ‘தீனா’ படத்தில் வெளியான ‘காதல் வெப்சைட் ஒன்று’ பாடல் படமாக்கப்பட்ட போது நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நடிகை லைலா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 
 
image
 
அஜித்குமார் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தீனா’.  இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இதன் மூலமே தமிழ்த் திரை உலகத்திற்கு இயக்குநராக இவர் அறிமுகமானார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக  லைலா நடித்திருந்தார். இதில் நடித்ததன் மூலமே அஜித்திற்கு ‘தல’ என்ற பட்டம் கிடைத்தது. அதைத்தான் அவரது ரசிகர்கள் இதுவரை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்தப் படம் வெளியானபோது பெரிய வரவேற்பைப் பெற்றது. 
 
 
இந்நிலையில் நடிகை லைலா, இந்தப் படத்தில் நடித்த போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைப் பார்த்ததாகக் கூறியுள்ள லைலா, “அஜித்தின் ‘தீனா’ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. எனவே  இந்தப் படத்தில் இடம்பெற்ற‘காதல் வெப்சைட்’ பாடல் பற்றி  உங்களது காதல் நினைவுகளைச் சொல்லுங்கள்.  நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்தப் பாடல் படமாக்கப்பட்ட போது எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் மோசமான காய்ச்சலிலிருந்தேன். ஜலதோஷம் வேறு இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டவில்லை.  ஆனால் பாடல் மிக அழகாக இருந்தது. இந்தப் பாடலின் எனர்ஜியே எனக்கு ஆடுவதற்குச் சக்தியைக் கொடுத்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்தைப் படித்த பலரும் அந்தப் படத்தின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 
 
 
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.