ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார் முகேஷ் அம்பானி.

சமூக வலைதளங்களின் ராஜாவாக பார்க்கப்படுகிறது ஃபேஸ்புக் . இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் ஃபேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமானது ஆகும். இந்தியாவில் பல கோடி மக்கள் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோவும் உள்ளது. மிகக்குறைந்த விலையில் இண்டர்னெட் சேவை வழங்கியதன் மூலம் அதிக மக்களை சென்றடைந்தது ஜியோ. தற்போது இந்த இரு பெரிய நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

Alibaba Founder Jack Ma to Step Down as Chairman in 2019? Teacher ...

குணமடைந்த நபருக்கு 70 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா – சீனாவில் அதிர்ச்சி..!

முகேஷ் அம்பானி நிர்வகித்து வரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜியோ பிளாட்பார்ம்சின் 10% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் ரூ43,574 கோடிஅளவுக்கு முதலீடு செய்துள்ளது.

இதனிடையே இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதையடுத்து 2018-ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா மீண்டும் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். சீன தொழிலதிபதிரான ஜாக் மாவின் நிகர சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலர் ஆகும். இது அம்பானியின் சொத்து மதிப்பை விட 2.6 பில்லியன் டாலர் அதிகமாக இருந்தது.

இனி முகேஷ் அம்பானி ஆசியாவின் ...

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை – புதுச்சேரி முதல்வர்

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் 10 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதை அடுத்து நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபத்தை ஈட்டியது. இதனால் அம்பானியின் சொத்து மதிப்பு புதனன்று ஒரே நாளில் 4.7 பில்லியன் டாலர் உயர்ந்து 49.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதன் மூலம் சீனாவின் அலிபாபா குழும தலைவரான ஜாக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.