வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று பிசிஆர் டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர முழுவதும் ௧௦௦ சதவிகிதம் கட்டுப்பாட்டுப் பகுதியாக  அறிவிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி கிராமிய பெண் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணிபுரியும் 43 காவலர்கள் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
 
image
 
இந்நிலையில் வாணியம்பாடி கிராம பெண் ஆய்வாளர் தங்கியிருந்த செட்டியப்பணுர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தங்கியிருந்த வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மருத்துவர் குழுவினர், வருவாய்த்துறையினர் என அனைவரும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி கிராம காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது.
 
image
 
இதனிடையே வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மூடப்பட்டதால், அது வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் தற்காலிகமாகச் செயல்படும் எனத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.