கடைக்காரர்கள் தங்களுக்கு உணவுப்பொருட்கள் தர மறுப்பதாகவும், அதனால் தாங்கள் பசியால் வாடுவதாகவும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த 43 பேர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அய்யாக்கோட்டையூரில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் பூர்வீக குடிகளாக உள்ளனர். இவர்கள் கோவை அருப்புக்கோட்டையில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு திரும்பி விடுமுறையில் தங்கிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி வைப்பார் பள்ளி வாசலில் நடைபெற்ற விழாவிற்கு வந்துள்ளனர். பின்னர் இவர்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கு முன்பே கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

image

இதனால் அவர்களால் பணிபுரியும் ஊருக்கு திரும்ப முடியவில்லை. பணிபுரியும் ஊர்களிலேயே வீடுகள் கட்டிவிட்டதால், சொந்த ஊரில் இருந்த வீடுகளை பெரும்பாலானோர் பராமரிக்காமல் விட்டுள்ளனர். இதனால் திடீர் ஊரடங்கில் தங்குவதற்கு இடம் இல்லாமல் பள்ளி வாசல்களிலேயே தங்கியுள்ளனர். அத்துடன் ஊருக்கு வரும்போது கொண்டு வந்த பணத்தை வைத்து உணவு சமைத்து வாழ்ந்தனர். பணம் தீர்ந்த நிலையில் அருகில் உள்ள சிலரிடம் உதவி கேட்டுள்ளனர். அவர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்த நிலையில் ஊரடங்கு நீண்டு கொண்டே போவதால் யாரிடமும் உதவி கேட்க முடியாத நிலையில் உணவின்றி தவித்து வருகின்றனர். 

image

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் அவர்களுக்கு உணவு மற்றும் பால் உள்ளிட்ட பொருட்களை தர மறுப்பதாக கூறப்படுகிறது. டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இஸ்லாமியர்கள் என்பதால் இவர்களுக்கு கொரோனா இருக்குமோ என அஞ்சி உணவுகளை தர மறுப்பதாக தெரிகிறது. இதனால் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த 43 பேர் பசியால் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல்கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றதாகவும், பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இஸ்லாமிய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

போலீசார் பலருக்கு கொரோனா: மபியில் மூடப்பட்ட தலைமை காவல் அலுவலகம்

அத்துடன் குழந்தைகளுக்கு பால் கூட வாங்க முடியவில்லை என்றும், முதியவர்களுக்கு மருத்து வாங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இப்படியே போனால் பசியால் தாங்கள் இறக்க நேரிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். தங்களை பணிபுரியும் ஊருக்கு அழைத்து சென்றுவிட்டால் போதும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.