உலகையே ஆட்டிப்படைக்கும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸின் தடயங்கள் தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா வைரஸின் தடயங்கள் தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன் நதி மற்றும் எவர்க் கால்வாய் நீர், அந்நகரிலுள்ள பூங்காங்கள், தோட்டப்பணிகள் மற்றும் நகரிலுள்ள அலங்கார நீர் ஊற்றுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

image

இந்நிலையில் இந்த தண்ணீரின் 27 மாதிரிகளை பாரிஸ் நீர் ஆணையத்தின் ஆய்வகம் பரிசோதித்தது. அதில் கொரோனா வைரஸின் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீன் நதி மற்றும் எவர்க் கால்வாய் நீரின் பயன்பாட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீரானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படுவது இல்லை என்பதால் குடிநீர் மாசுபட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

image

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை நாய்களின் மோப்பத்திறன் மூலம் கண்டறிய முடியுமா? – பிரிட்டனில் ஆய்வு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.