டெல்லி ஆசாத்புர் சப்ஜி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியாகிருக்கிறது.

image

டெல்லியில் ஆசாத்புர் சப்ஜி சந்தையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க இன்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய வசதியாகவும், காய்கறிகளின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் ஆசாத்புர் சப்ஜி சந்தையை 24 மணி
நேரமும் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 4-ஆம் தேதிக்கு பின் ஊரடங்கை தளர்த்த இத்தாலி பிரதமர் முடிவு

image

முன்விரோதம்: சென்னையில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை!

முதல் நாளிலேயே சந்தையில் கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பேர் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வியாபாரிகள் தங்கள் கடைகளில் வரும்
வாடிக்கையாளர்களின் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் சந்தையில் ஏராளமானோர்
குவிந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.