கரூரில் உயிருக்குப் போராடிய மாணவியை உடனே மருத்துவமனை கொண்டு செல்ல உதவவில்லை எனக் கூறி 108 ஆம்புலன்ஸை மக்கள் சிறைபிடித்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பல மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் ஒன்றான ஐயம்பாளையத்தில் இன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மோகனப்பிரியா குடும்பப் பிரச்னையால் மண்னெண்ணைய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் காயங்களுடன் அவதிப்பட்ட அவரை அங்கிருந்த இளைஞர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

image

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அந்த இளைஞர்கள் வாடகை கார் ஒன்றை பிடித்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த மாணவியை கொண்டு சென்றுள்ளனர். தாமதமாக கொண்டு சென்ற காரணத்தால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இறந்துவிட்டார். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு தாமதமாக 108 ஆம்புலன்ஸ் கடவூருக்கு வந்துள்ளது. ஆம்புலன்ஸைக் கண்டதும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

தகவலறிந்து வந்த பாலவிடுதி காவல்நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் இருந்தோ ? அல்லது தரகம்பட்டி அருகே இருந்துதான் வரவேண்டியிருப்பதாக தெரிவித்தனர். அத்துடன் தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை கடவூர் ஊராட்சி அலுவலகம் அருகில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

“மே மாத மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும்”: அதிர்ச்சியூட்டும் ஆய்வு !

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.