ரேசன் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
“உன்கிட்ட பதில் சொல்ல முடியாது” – குடிபோதையில் பெண் போலீஸிடம் தகராறு செய்த அதிமுக பிரமுகர்
பொதுமக்கள் கூட்டமாக வெளியே வருவதை தடுக்கும் வகையில், ரேசன் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மே மாதத்திற்கான ரேசன் பொருட்களை வாங்க வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் டோக்கன் வழங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த டோக்கன்களில் பொருட்கள் வழங்கும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் அந்த நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில பொருட்களுக்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடித்து ரேசன் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM