கொரோனாவை நாய்களின் மோப்பத்திறன் மூலம் கண்டறிய முடியுமா என்பது குறித்து பிரிட்டனில் ஆய்வு நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதில் பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என்று பல நாடுகளில் குரல்கள் எழுகின்றன. சிறப்பு ஆய்வகங்களில் பரிசோதித்து முடிவைச் சொல்ல குறைந்தபட்சம் 2 நாள்கள் ஆகும் நிலையில், இப்போது ரேபிட் டெஸ்ட் கருவிகள் பேசுபொருளாகி இருக்கின்றன. அரை மணி நேரத்தில் கண்டறியலாம் என்றாலும், இந்தக் கருவிகளுக்கு உலகம் முழுவதும் காத்திருக்கும் நிலை உள்ளது.

image

இந்த சூழலில், கொரோனா வைரஸை நாய்களின் மோப்பத்திறன் மூலம் கண்டறிய முடியுமா என பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் வெப்ப மண்டல மருந்துக்கான லண்டன் கல்வி மையத்துடன் அறக்கட்டளை அமைப்பு ஒன்று இணைந்து ஆய்வைத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே மலேரியா குறித்த ஆய்வில் நாயின் மோப்பத்திறன் உதவியது போல, கோவிட்-19 வைரஸ் கண்டறிதலிலும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அது சாத்தியமானால், நூற்றுக்கணக்கானோருக்கு தொற்றை வேகமாகக் கண்டறிய முடியும் என அவர்கள் நம்புகின்றனர். அதன்மூலம் யாரைத் தனிமைப்படுத்த வேண்டும், யாருக்கு கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை விரைவாக அறியலாம் என்கின்றனர்.

image

பாக்டீரியா மற்றும் இதர நோய்களை அறியும் திறன் நாய்க்கு உள்ளதற்கு ஆதாரம் இருப்பதாகவும், கொரோனா பரவலைத் தடுப்பதிலும் இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்கலாம் என்று நம்புவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

10% பங்குகள்: ஜியோ நிறுவனத்தில் ரூ.43,500 கோடி முதலீடு செய்த ஃபேஸ்புக்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.