இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கொல்லும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை : கமல்ஹாசன்
திருவள்ளூர் விவசாயி போராட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். அதன் பின்னர் அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தலைவா, அசுரன் உள்ளிட்ட பலப் படங்களுக்கு இசையமைத்தார். அத்துடன் டார்லிங், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இதனையடுத்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை மணமுடித்தார். அதன் பின்னர் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றினர். இந்நிலையில் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM