நாமக்கல்லில் இரு கோஷ்டியிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கரிய பெருமாள் கரட்டுபுதூர் பகுதியில் வசித்து வந்தவர் கெளதம் (23). இவரது சகோதரி கெளசல்யாவுக்கும் (21), அதேபகுதியை சேர்ந்த கோபி (24) என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், கெளசல்யா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கெளதமன், கோபி மற்றும் அவரது நண்பர்கள் மணிவண்ணன், சிவகுமார், மனோஜ் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், அதேஊரை சேர்ந்த ராமசந்திரன் (32), ரவிசந்திரன் (27), பூவராகவன், மனோஜ் குமார் உள்ளிட்டோர் மற்றொரு கோஷ்டியாகவும் இருந்துள்ளனர்.

image

இரு கோஷ்டிகளுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கர்ப்பிணியான கெளசல்யாவிடம் ராமசந்திரன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையறிந்த கெளதமன், கோபியுடன் சென்று தனது தங்கையிடம் தகராறு செய்தது குறித்து நேற்றிரவு தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராமசந்திரன் அவரது தம்பி ரவிசந்திரன் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கெளதம் மற்றும் கோபி ஆகியோரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.

image

இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராமசந்திரன் மற்றும் மனோஜ்குமாரை அங்கிருந்தவர்கள் விரட்டிப்பிடிக்க ரவிசந்திரனும், பூவராகவனும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தூய்மைப் பணியாளருக்கு கொரோனா – 11 பேருக்கு மருத்துவ சோதனை

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமசந்திரன் மற்றும் மனோஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ரவிசந்திரன் மற்றும் பூவராகவனை தேடி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.