புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இளைஞர் வசித்த கிராமத்தைச் சுற்றி எட்டு கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் புதுக்கோட்டையில் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு இல்லாமல் இருந்தது.
வெளிநாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள 4895 நபர்களில் 3645 நபர்களின் 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முழுமையாக முடிவடைந்தது. இந்நிலையில் மீதமுள்ள 1250 நபர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பிய 15 பேர் அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதை அடுத்து கடந்த 10 ம் தேதி அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த ஒரு நபரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இளைஞர் வசித்து வந்த பகுதியின் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த தந்தைக்கு இரு முறை சோதனை மேற்கொண்ட போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லாத சூழ்நிலையில் அவரது மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சுகாதாரத்துறையினரிடையை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த இளைஞர் வசித்த கிராமத்தைச் சுற்றி எட்டு கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
‘எச்.ஐ.வி. ஆய்வின் போது நேர்ந்த தவறினால் கொரோனா உருவாகியிருக்கலாம்’ – நோபல் பரிசு விஞ்ஞானி