கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரியில் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

உலக நாடுகளை அச்சத்தில் வைத்திருக்கிறது கொரோனா. இந்த தொற்று நோயை விரட்ட உலக நாடுகள் போராடி வருகின்றன. பல்வேறு தரப்பினரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதி திரட்டி வருகின்றனர். இந்தியாவிலும் மத்திய மாநில அரசுகள் மக்களிடையே நிதி உதவி கோரியுள்ளன. இந்நிலையில் கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரியில் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

image

பிரபல பாப் இசை பாடகி லேடி ககாவும் , உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி, ONE WORLD, TOGHTER AT HOME என பெயரிடப்பட்டிருந்தது. இதில், ஸ்டிவி வொண்டர். பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் உள்ளிட்ட பிரபலங்கள் வீட்டிலிருந்த படியே கலந்து கொண்டனர்.

கச்சேரியின் இடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்த நிலையில், இந்த கச்சேரி மூலமாக சுமார் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image

இந்த நிதி, கொரோனாவை எதிர்த்து முன்னின்று போராடிய வரும் மருத்துவ பணியாளர்களின் நலனுக்காக அளிக்கப்படவுள்ளது.

பழைய சைக்கிள்.. 85 கி.மீ பயணம்… அண்ணன்- தங்கை பாசத்தை வெளிக்கொண்டு வந்த ஊரடங்கு..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.