உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் நோய் தொற்றுக்கு ஆளாகி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது‌. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் புதிதாக ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 21 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

image

இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்து வருவதால், அங்கு உயிரிழப்போர் எண்ணிக்கையும் சற்று குறைந்து வருகிறது. பிரிட்டனிலும் பெரிதாக நோய் தொற்று ஏற்படவில்லை. ரஷ்யாவில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்திலிருந்து அசாமிற்கு நடக்க துணிந்த தொழிலாளி: இறுதியில் பிச்சை எடுக்க நேர்ந்த அவலம்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.