கோவை மாவட்டத்தில் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் கொரோனா குறித்து பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
வடகொரிய அதிபரின் உடல்நிலை: ஒவ்வொரு நகர்வுகளையும் அமெரிக்கா கவனிப்பதாக தகவல்!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண்ம இருக்கிறது. இதனால் தமிழக அரசு மே 3-ஆம் தேதி வரை, ஊரடங்கில் எந்த தளர்வுகளும் தளர்த்தப்படமாட்டது என அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை..!
இந்நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்யும் வகையில் பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் துணை ஆய்வாளர் மணிமாறன், பாடல்கள் வழியாக தனிமனித இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறார். கோமங்கலம், சிஞ்சுவாடி, தேவனூர்ப்புதூர், கஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ள இவர் மேலும் பல கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு தொடர உள்ளதாக கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM