தி.மு.க தலைவர் ஸ்டாலின், கட்சி உறுப்பினர்களோடு காணொளி மூலம் கலந்துரையாடி, “ஒன்றிணைவோம் வா!” எனும் முயற்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஒன்றிணைவோம் வா” என்ற முயற்சியை மாநில அளவில் காணொளி வாயிலாக துவங்கியுள்ளார். எம்.பி, எம்.எல்.ஏ, மற்றும் மாவட்ட செயலாளர்களை உள்ளடக்கிய 200 முக்கிய தலைவர்களிடம் இது குறித்து விரிவுரையாற்றினார். அப்போது கொரோனாவால் பாதிக்க பட்ட மக்களுக்கு துரிதமாக உதவுவது குறித்து, ஆலோசித்தார்.

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கொரோனா ...

“ஊரடங்கால் வறுமையில் சிக்கித்தவிக்கிறோம்”: 82 வயது நெசவுத் தொழிலாளர் வேதனை…!

பின்னர் அவர் பேசுகையில், “யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும், என் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். பசியால் வாடுபவர்களுக்கு, எங்களால் முடிந்தளவு உணவு அளிப்போம். ஒவ்வொரு திமுக உறுப்பினரும், அக்கம் பக்கம் இருக்கும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் உறுதுணையாக இருக்க வேண்டும். கட்சி தொண்டர்கள் முழுவீச்சில் இம்முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த 1.5 – 2 மாதங்கள், தானும் அவர்களுடன் இதில் இணைந்திருப்பேன்” எனத் தெரிவித்தார்.

இம்முயற்சியின் தொடக்கமாக, திமுக தலைவர் ஸ்டாலின் 90730 90730 என்ற உதவி எண்ணையும், ondrinaivomvaa.in என்ற இணையதளத்தயும் அறிமுகபடுத்தினார். இவை மூலம், வரும் நாட்களில் உதவி தேவைபடுவோர் எளிதாக உதவிகளை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.