வால்பாறையைச் சேர்ந்த பிரசவம் ஆகி இரண்டு நாட்களே ஆன இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கிருந்து அவருக்கு கொரோனா தொற்று பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பெண் தேனிக்கு திருமணமாகி சென்ற நிலையில், பிரசவத்திற்காக மீண்டும் வால்பாறைக்கு வந்துள்ளார். தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே அதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்திருந்த மற்றொரு பெண்ணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி வால்பாறை பெண்ணுக்கும் கொரோனா சோதனை செய்துவிட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பரிசோதனை முடிவில் வால்பாறை பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து அப்பெண்ணையும், குழந்தையையும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், வால்பாறையில் பெண்ணுடன் வசித்தவர்கள், அவரைக் காண வந்த உறவினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.
ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM