அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம், வேறெந்த நாடுகளையும் விட பெரிதும் அதிகரித்துள்ள சூழலில் ட்ரம்ப் அரசின் உதவிகள் கிடைக்காததற்கு மாநில ஆளுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், முடக்கத்தை எதிர்க்கும் போராட்டங்களுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

image

உலகிலேயே அமெரிக்கா கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில், அந்நாட்டிலேயே மிக அதிகமாக நியூயார்க் பாதிக்கப்பட்டு வருகிறது. நியூயார்க்கில் உயிரிழப்புகள் கட்டுக்குள் வராத நிலையில், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு கிடைக்கவில்லை. இந்நேரத்தில் ட்ரம்ப் அரசு என்ன செய்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ள நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியோமோ. இதுவரை அரசிடம் இருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மாநிலங்களின் அதிகாரங்கள் என்ன என்று சொல்வதற்கு ஒரு அதிபர் தேவையில்லை என்றும். அவை மாநிலங்களுக்கே தெரியும் என்றும்’ அவர் காட்டமாக கூறியுள்ளார்.

image

ட்ரம்ப் அரசு இதுவரை 3 மசோதாக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், அவற்றில் இருந்து மாநிலங்களுக்கு கிடைத்தது ஒன்றுமில்லை என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குற்றம்சாட்டியுள்ளார் இந்நிலையில், மின்னசோட்டா, விர்ஜினியா, மிச்சிகன் மாநிலங்களில் பொதுமுடக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிகும் ஒஹியோ, மிச்சிகன், விஸ்கான்சின், இல்லினாய்ஸ், இண்டியானா, கென்டகி மாநிலங்களின் ஆளுநர்கள் மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கைகோர்த்துள்ளனர். மத்திய ட்ரம்ப் அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்காதது பற்றி ஜனநாயக கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மாநிலங்களில் முடக்கத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கு அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

image

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மிச்சிகன், விர்ஜினியா, மின்னசோட்டா மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் ஆளும் மாநிலங்களில்தான் போராட்டம் நடப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால், ஆளும் குடியரசு கட்சியினர் வசமுள்ள ஒஹியோ, உதா மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களை ட்ரம்ப் குறிப்பிடவில்லை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.