ஐ.சி.பி.எஃப் (Indian Child Protection Fund) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த ஊரடங்கு காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு, குழந்தைகளின் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறது. இதில் மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் இந்தியாவில் உள்ள 100 நகரங்களை கண்காணித்ததில், சென்னை மற்றும் புவனேஷ்வரில்தான் அதிகளவில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் தேடியது தெரியவந்திருக்கிறது. ஆபாச படங்கள் குறித்த புரிதலை அறிந்து கொள்ள மாணவர்களிடம் பாலியல் உணர்வுசார்ந்த மற்றும் உடல் மனம், உயிர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவரும்  ரேகா பத்மநாதனை தொடர்பு கொண்டு பேசினோம்.

image

 

ஆபாச படங்கள் நம் மீது இவ்வளவு ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணம் என்ன ?

நமது அனுமதியின்றி நம்மீது யாரும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பில்லை. ஒரு அறையில் கத்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த அறையில் உங்களை தவிர யாரும் இல்லை. ஆனால் உங்களின் கையில் காயம் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்? கத்தியின் ஆதிக்கமா இல்லை நமது அறியாமையா?. அது போலத்தான் ஆபாசப்படங்களும். நம்மிடம் போதிய விழிப்புணர்வு இல்லை அவ்வளவுதான்.

என்னைக் கேட்டால் இந்தப் பிரச்னையின் உண்மையான வீரீயத்தை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டுமானால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு கோரத்தை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாகவாவது சமூகத்தில் பகிர வேண்டும். பெற்றோர்களும் கொஞ்சம் வெட்கத்தை ஒதுக்கிவைத்து விட்டு காமம் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

 

image

ஆபாசப் படங்களின் மூலம் எது?

மூலம் என்ன இருக்கு.. தனது வயிற்று பிழைப்பிற்காக பணம் திரட்ட நினைக்கும் மனிதர்கள்தான். காமத்தில் முழுமை அடைய முயற்சிக்கும் அறியாமை எண்ணத்தால் இதுபோன்ற ஆபாசப் படங்களை பார்த்து திருப்தி அடைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு படத்தில் மனோரமா கோழியின் புகைப்படத்தை கட்டி தொங்கவிட்டு பழைய சோறு சாப்பிடுவது போல..

 

ஆபாச படங்கள் நமது உடலில் என்ன மாதிரியான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன ?

பேய் படம் பார்க்கும் 6 வயது குழந்தை உடலில் பயம் எவ்வளவு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துமோ அதுபோலதான் இதுவும். அந்த குழந்தை ஆழ் மனதில், உடலில் அந்தப் படம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே தாக்கத்தை ஆபாச படங்களும் உருவாக்கும். ஆழ்மனதில் பதியும் இந்த ஆபாச படங்களில் நுழைவது மிக எளிது. ஆனால் அதிலிருந்து வெளிவருவது என்பது, அதில் கிடைத்த இன்பத்தை விட 1000 மடங்கு கடினமான ஒன்று. இதனால் காலப்போக்கில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.

சில மருத்துவர்கள் சுய இன்பம் செய்வது தவறில்லை என பிரசாரம் செய்கிறார்கள். அதனால் வரும் விளைவை அனுபவிக்க போவது சம்பந்த பட்ட நபரே அன்றி மருத்துவரல்ல.

 

image

மற்ற கெட்ட பழக்கங்களை விட, இது தொடர்பான பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் வெளியே வர மிகவும் சிரமப்படுகிறார்கள்? இதற்கு தீர்வு என்ன?

இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் தவிப்போரைக் கேட்டால், ஆரம்பத்திலயே யாராவது இதன் விளைவை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுத்து இருந்தால் நான் இந்த நிலைக்கு அடிமை ஆகி இருக்க மாட்டேன் என்று கூறுவார்கள். அதனால் தான் கூறுகிறேன் பாதிக்கப்பட்டோர் முகம் காட்டாமல் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். கிணற்றில் நீர் வற்றினால் மீண்டும் ஆழ்துளை கிணறுகளை உருவாக்குகிறார்கள். ஆனால் நீருக்கான ஆதாரம் என்ன மழை, இதற்கு மூலம் காற்று. அதற்கு மூலம் இயற்கை வளம். ஒருநாள் உயிர்பிரிந்தால் மண் அல்லது நெருப்பிற்கு செல்ல இருக்கும் இந்த உடலின் ஒரு பாகத்தை பிடித்துத் தொங்கி கொண்டிருக்கிறோம்.

அருவியின் அருகில் சென்றால் குளிரும். நெருப்பின் அருகில் சென்றால் சுடும். அதுப்போல உயிரணுக்கள் மனித குல படைப்பாற்றலின் விதை. அவை வெளியேறும்போது மட்டுமே மனிதன் படைப்பாற்றல் என்ற super consciousness அருகில் செல்கிறான். ஆகவே அதில் ஈடுபடும் போது அவன் /அவள் இன்பத்தின் உச்சத்தை ஒரு நொடி உணர்கின்றனர். இவ்வளவுதான் அதன் பின் உள்ள ஞானம். ஆனால் இதே ஆற்றலை நாம்  ஆக்கப்பூர்வமான விஷயங்களில் செலவிடும் போது, இதுவெல்லாம் ஒரு பிரச்னையாகவே இருக்காது எனபதை நீங்கள் அனுபவபூர்வமாகவே உணரலாம். 

image

இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுவர்கள் – குற்றணர்வில் சிக்கி கொள்கிறார்கள் அது ஏன் ? இதற்கு தீர்வு என்ன?

அரசன் என்பவன் தன் நாட்டில் யார் தவறு செய்தாலும், எந்த ஏற்றத் தாழ்வின்றி கடும் தண்டனை வழங்குபவனாக இருப்பவனாக இருந்தால் அவன் ஆட்சி எல்லைக்குள் இருக்கும். ஒருவன் சிறு தவறு செய்துவிட்டாலும் குற்ற உணர்ச்சியாலே பயந்து நடுங்குவான். அதற்கு காரணம் கட்டாயம் ஒருநாள் பிடிபடுவோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. இயற்கைக்கு எதிராக செய்யும் இந்தப் பழக்கத்திற்கான விடையே அவன் மனதில் தோன்றும் குற்ற உணர்வுதான்.

image

இதனை தவிர்க்க இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள்?

1 உடலில் காம உணர்வு ஏற்படும்போது தனிமையில் கண்களை மூடி உடலில், மனதில், என்னென்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை மட்டும் முழுவதும் கவனியுங்கள் அப்போது இது கோபம், பயம் போல இதுவும் ஒரு சகஜமான உணர்வுதான் என்பது புரியும்.

2. ஆக்கப்பூர்வமான நற்சிந்தனை வளர்க்கும் மறைந்த உண்மை ஞானிகள் புத்தகங்களை வாசிக்கலாம்.

image

3 .சுற்றியிருக்கும் யாரும் என்போல ஆபாச விஷயங்களில் கவனம் செலுத்துவது இல்லை. நானும் அதுபோல என் மனதை நல்ல விஷயங்களில் திசை திருப்புவேன் என்று உறுதி கொள்ளுதல் வேண்டும்.

4. பொழுது போக்கு சாதனங்களில் புலனின்பங்களில் அலைய விடகூடாது. அப்படி அலைய விடும் போது மனம் அதிக பலம் பெற்று நம்மை ஆளும் ஆற்றல் மனதிற்கு அதிகரிக்கும். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.