ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரெய்னாவையே தோனி விரும்பினார்.. வேறுவழியின்றி என்னை சேர்த்தார்” – மனம்திறந்த யுவராஜ் சிங்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்தாண்டு நடைபெற இருந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களில் பொழுதைப் போக்கி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளை சாதாமாக்கிக் கொண்டு கிரிக்கெட் வீரர்களுடன் சூதாட்ட தரகர்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாட்டாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
வருவாய் இழந்து தவித்து வரும் வீரர்களையும், குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் வீரர்களை குறிவைத்து தரகர்கள் அணுகுவார்கள் என்பதால் கவனத்துடன் இருக்குமாறு வீரர்களுக்கு ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM