நடிகர் விஜயுடன் தனது மகள் நைனிகா எடுத்து கொண்ட புகைப்படத்தை நடிகை மீனா பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும் விஜய்க்கு மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். அந்தப் படத்தில் டம் பெற்ற ‘தெறி பேபி’ வசனம் மிக பிரபலமடைந்தது. மேலும் அடுத்தடுத்து விஜயை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் அட்லீக்குப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கடந்து ‘தெறி’ படத்தின் வெற்றி நிகழ்ச்சியின் போது, தனது மகள் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை மீனா பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் படம் இதுவரை வெளிவராத புகைப்படம் எனத் தெரிகிறது. மேலும் அதனை விஜய் மற்றும் அட்லீக்கு டேக் செய்துள்ளார். ‘தெறி’ இதேபோல் ஒரு ஏப்ரல் மாதத்தில்தான் வெளியானது.

இது குறித்து மீனா, “தெறி சக்சஸ் பார்டியில் எடுத்தது’ எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே மோகன் லால் நடித்த ‘த்ரிஷம்’ மலையாள படத்தில் நடிகை மீனா ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சிறுத்தை சிவா இயக்கி வரும் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இதன் மூலம் சேர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM