ஊரடங்கு உத்தரவினால் சென்னை நகரத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களின் விகிதம் 79% அளவிற்குக் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் நடமாட்டம் நாட்டில் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூகுள் நிறுவனம்கூட ஒரு புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது. அதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த குற்றச் செயல்களுடன் ஒப்பிடும்போது மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை திருட்டு, கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் சென்னையில் உள்ள நகரங்களில் 79% குறைவாக உள்ளது என்று காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது பிப்ரவரி 25 முதல் மார்ச் 15 வரையான கால இடைவெளியைவிட இது குறைந்து காணப்படுகிறது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 25 முதல் மார்ச் 15 வரையிலான காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது கொலைகளின் எண்ணிக்கை 44%, கொள்ளை சம்பவங்கள் 75%, திருட்டு 81% மற்றும் வீட்டை உடைத்துத் திருடுவது 59% குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரையிலான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 71 ஆக இருந்த நிலையில், பிப்ரவரி 25 முதல் மார்ச் 15 வரையிலான இந்த குற்றங்களின் ஒப்பீடும் மோது அதன் எண்ணிக்கை 318 ஆக இருந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதேபோல், போக்குவரத்து தொடர்பான வழக்குகள், அபாயகரமான விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் கடுமையான காயங்கள் போன்ற சம்பவங்களும் ஊரடங்கு காலத்தில் குறைந்தே காணப்படுகின்றன. மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை, போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளில் 86 பேர் ஈடுபட்டனர். பிப்ரவரி 25 முதல் மார்ச் 15 வரையிலான காலகட்ட தரவுகளுடன் ஒப்பிடும்போது இது கடுமையாka வீழ்ச்சியைந்துள்ளது. இந்த காலப் பகுதிக்குள், 444 நபர்கள் இந்த மாதிரியான வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24 அன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் ஊர்டடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முதலில் ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு, மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர அதனை மோடி மே 3 வரை நீட்டித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.