உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது. 16 நாளில் ஒரு லட்சம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு.
தமிழகத்தில் நேற்று மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு. நோய்த்தொற்றிலிருந்து ஒரேநாளில் 103 பேர் மீண்டனர்.
கொரோனா பரிசோதனைக்காக முதல்கட்டமாக 24ஆயிரம் RAPID டெஸ்ட் கிட் வந்திருப்பதாக முதல்வர் பேட்டி. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து
நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்.
தேவையான உபகரணங்களை வாங்கி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
மேற்குவங்கத்தில் தடுக்கப்பட்ட தமிழக ஆம்புலன்ஸ்களுக்கு புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக ஊருக்குள் செல்ல அனுமதி.
சித்திரை திருவிழாவை ரத்து செய்தது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம். திருக்கல்யாண வைபவம் இணைய தளத்தில் நேரலை செய்யப்படும் என்று அறிவிப்பு.
ஊரடங்கு நேரம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பார்வை குறைபாடுள்ள பெண்
நடுரோட்டில் வலியால் துடித்த ஒடிசா பெண்ணுக்கு பிரசவம் பார்த்த எழுத்தாளர் ‘ஆட்டோ சந்திரன்’
இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரின் விசா மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு. ஊடரங்கு அமலில் இருப்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் வரும் 20-ஆம் தேதி முதல் இயங்கும். மத்திய அரசு அனுமதிக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM