சேலத்தில் போலீஸாரின் ட்ரோன் கேமராவை பார்த்ததும் இளைஞர்கள் தலைதெறிக்க ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் கிராமப் பகுதியில் வயல்வெளி அருகேயுள்ள பொட்டல்காட்டு மரத்தடியில் கேரம் போர்டு விளையாடிய கும்பல் ஒன்று போலீஸாரின் ட்ரோன் கேமராவை பார்த்ததும் தலை தெறிக்க ஓடிய காட்சிகள் அண்மையில் வைரலாகியது. அதிலும் ஒரு நபர் கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்ததும், கேரம் போர்டுக்கு பின்னால் அவர் ஒளிந்த காட்சி நகைச்சுவையாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இதேபோன்று ஊரடங்கை மீறி ஆளில்லா பகுதியில் சேர்ந்திருந்த இளைஞர்கள் அலறி ஓடிய சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ காட்சிகளை சேலம் போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் லுங்கியை வைத்துக்கொண்டு ட்ரோன் கேமராவிடம் இருந்து ஒளியும் இளைஞர், இலைகளை வைத்துக்கொண்டு ஒளியும் நபர், மரத்திற்கு பின்னால் ஒளியும் இளைஞர்கள், போலீஸாரிடம் சிக்கிய நபர்கள் என சிரிப்பலையை ஏற்படுத்தும் காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளன.
அதே காமெடி சேலம் மாநகரிலும் ??? (நகர மலை அடிவாரத்தில்) pic.twitter.com/uyvkPR032o
— salemcitypolice (@Salemcitypolice) April 17, 2020
அதேசமயம் இந்த காட்சிகள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, உயிரைக்கொல்லும் கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு நேரத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிமாநிலத்தவர்களுக்கும் ரேசன் பொருட்களை வழங்க உ.பி. முதல்வர் உத்தரவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM