சீனாவில் இருந்து விரைவு பரிசோதனை உபகரணங்கள் சென்னைக்கு வந்தடைந்தன.
தமிழகத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், கொரோனாவை அறிவதற்கான சோதனைகள் விரைவாக செய்யப்பட்டவில்லை என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. 3,371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2500 வெண்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது என்று கூறினார்.
வங்கிகளில் போதிய அளவில் பணம் இருக்க நடவடிக்கை: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி
ஜி 20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது: ஆர்பிஐ ஆளுநர் பேட்டி
இந்நிலையில் நேற்று சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட்கள் சென்னைக்கு வந்திறங்கியுள்ளன. இதில் 24,000 கிட்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM