வெளவால்களிலிருந்து கொரோனா பரவியதாக சந்தேகம் எழுந்த நிலையில், நாகையைச் சேர்ந்த கிராம மக்கள் அவற்றை கடவுளாக வழிபட்டு வருகின்றனர் .
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில், வெளவாளடி என்ற இடத்தில் உள்ள பழமையான ஆலமரம் வெளவால்களின் இருப்பிடமாக திகழ்கிறது. சுமார் 150 ஆண்டுகளாக அங்குள்ள வெளவால்களை கடவுளாக நினைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
அப்பகுதி மக்கள். வெளவால்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றனர். வெளவால்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க, இளைஞர்களை உள்ளடக்கிய வேட்டை தடுப்புக் குழுவையும் கிராம மக்கள் அமைத்துள்ளனர்.
பட்டாசு வெடித்தால் கடவுளாக வழிபடும் வெளவால்களுக்கு இடையூறு ஏற்படக் கூடும் என்பதால், பட்டாசு இல்லா தீபாவளியையே பெரம்பூர் கிராம மக்கள் கொண்டாடுவதாக தெரிவித்தனர். மூன்று தலைமுறைகளாக வெளவால்களை பாதுகாப்பதால், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்வதாக பெரம்பூர் கிராம மக்கள் நம்புகின்றனர்.
கலையும் ஐபிஎல் கனவு.. நெருங்கும் டி20 உலகக்கோப்பை… தோனியின் எதிர்காலம் என்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM