கொரோனாவுக்கு உடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2022ஆம் ஆண்டு வரை தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என ஹார்வர்டு பல்கலைகழகம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தனி மனித இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் மக்களுக்குவலியுறுத்தி வருகின்றன. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பொது சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வின் முடிவுகள் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. அதில் கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தனிமனித இடைவெளி ஒன்று தான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என கூறப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகள் இருவருக்கு காய்ச்சல் – ரத்த மாதிரிகள் ஆய்வு..!
கடந்த 2003ஆம் ஆண்டு சிறிய அளவில் தலைதூக்கிய சார்ஸ் வைரஸ், சிறிய இடைவெளிக்கு பின் மிகவும் பெரியதாக வெடித்ததை குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், கொரோனாவும் அது போல மீண்டும் வருவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா கொடூரம் : எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் உயிரிழப்பு?
சீனாவையே அவர்கள் உதாரணமாக கூறியுள்ளனர். ஒவ்வொரு குளிர்காலத்தில் கொரோனா தலைதூக்க வாய்ப்புள்ளதால், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என தெரிவித்துள்ளனர். மருந்து கண்டறியும் வரை அதாவது 2022ஆம் ஆண்டு வரையிலாவது தனி மனித இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவிடம் இருந்து மனிதனை காக்கமுடியும் என்றும், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.