டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து குவாட்டர் 500 ரூபாய் என விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 277 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கொடி கம்பம் பகுதியில் உள்ள வீட்டில் மதுபானங்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மகேந்திரன் என்பவர் வீட்டினுள்ளே மதுவை மறைத்து வைத்து வீட்டின் பின்புறமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்த 277 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிறைக்கைதிகள் இருவருக்கு காய்ச்சல் – ரத்த மாதிரிகள் ஆய்வு..!
மேலும், 120 ரூபாய் மதிப்புடைய குவாட்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் பெருமாநல்லூர் சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்கள் சட்டவிரோதமாக வாங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட மகேந்திரனை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.