ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசிடம் தகவல் தெரிவித்தால் போதும் அனுமதி பெற தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், உணவுப்பொருள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அரசிடம் தெரிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு உதவுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டுமென்ற உத்தரவை மாற்றி அமைக்கும்படி திமுக தரப்பில் கேட்டுக்கொண்ட நிலையில், அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அரசு அனுமதியளிக்கவும் உத்தரவிட்டனர்.