தமிழகத்தில் கொரோனா மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நேற்று 38 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தெரிவித்தார். இதனால் நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணியானது 1267 ஆக உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM