(கோப்பு புகைப்படம்)
 
கொரோனா உறுதி செய்யப்பட்ட தன்னார்வலருடன் தொடர்பிலிருந்த காவலர்கள் உட்பட 80 பேருக்கு கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தொடர்ந்து 3-ஆவது நாளாக கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 25 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்‌பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
image
 
இதனிடையே கடந்த மாதம் 23-ஆம் தேதி டெல்லியிலிருந்து விமானம் மூலம் முதியவர் ஒருவர் கோவை திரும்பி இருந்தார்.  கோவை துடியலூர் வடமதுரை கோத்தாரி நகரில் வசித்து வரும் இவருக்கு 61 வயது  ஆகிறது.  டெல்லியிலிருந்து இவர் திரும்பி இருந்ததால் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதனிடையே  கடந்த 14-ஆம் தேதி  இந்த முதியவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
 
 
மேலும் இவர் கடந்த 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை சாலைப் பணியிலிருந்த காவலர்களுக்கு உணவு வழங்கி உதவியது தெரியவந்தது. இதையடுத்து, பணியிலிருந்த துடியலூர் காவல் ஆய்வாளர் உட்பட 39 காவலர்கள், அவர் சென்று வந்த துடியலூர் அரசு மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் உட்பட 27 பேர் மற்றும் உறவினர்கள் 14 பேர் என மொத்தம்  80 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 
 
Corona Death in Chennai: 60-year-old Covid-19 positive patient ...
 
இந்நிலையில் அந்தச் சோதனையில் 80 பேருக்கும் நெகட்டீவ் என வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவர்கள் ஒரு வாரம் பணிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தன்னார்வலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.