38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். ஐபிஎல் போட்டிகளில் களம் இறங்கும் தோனி, அதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம்பெறலாம் என்றும் ரசிகர்கள் நம்பினார்கள்.
தோனியும் ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் தற்போது ஐபிஎல் நடைபெறவில்லை. இந்நிலையில் தோனியின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை என்னவென்று அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் தோனி குறித்து கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய ரெய்னா, அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். கிரிக்கெட் இன்னும் அவரிடம் உள்ளது. அவர் புத்துணர்ச்சியாக இருக்கிறார். சென்னையில் வெப்பம் அதிகம் என்றாலும் நாங்கள் மாலையில் மூன்று மணிநேர பேட்டிங் பயிற்சி செய்தோம். பயிற்சி விளையாட்டுகளை விளையாடினோம். அதில் தோனி அடித்த சிக்ஸர்கள் எல்லாமே இமாலய சிக்ஸர்கள் தான். நீங்கள் என்னிடம் கேட்டால், தோனி அற்புதமாக பேட்டிங் செய்கிறார் என்றுதான் சொல்வேன்.
அவரது உடல் வயதான அறிகுறிகளைக் காட்டவில்லை. அவர் வித்தியாசமாகத் தெரிகிறார். வேறு ஏதோ புதிதாகச் செய்ய முயற்சிக்கிறார், வித்தியாசமான ஒன்று, புதியது. எனவே அவர் ஆட்டத்தை பார்க்கும் போது ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார், மேலும் தன்னுடைய எதிர்காலம் குறித்து பேசிய ரெய்னா, டி20 உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவேன் என்று நம்பிக்கையுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ஆரம்பகால கிரிக்கெட், இளம் வீரர் ரிஷப் பண்ட் ஆட்டம் என பல விஷயங்கள் குறித்து ரெய்னா கலந்துரையாடினார்.
‘எனக்கு உதவி வேண்டும்’- டிக்டாக்கில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட வார்னர்