‘அலைபாயுதே’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாதவன், இயக்குநர் மணிரத்னம் உடன் இன்ஸ்டா பக்கத்தில் நேரலையில் உரையாடியுள்ளார்.
 
தமிழ் சினிமா வரலாற்றில் மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தை மறக்கவே முடியாது ஒன்று. சாக்லெட் பாய் மாதவனின் நடிப்பில் அந்தப் படம் பல உயரங்களைத் தொட்டது.  இந்தப் படம் வெளியாகி இருபது வருடங்களை நிறைவு செய்துள்ளது. அந்தப் படத்தில் ‘உன் மேல ஆசைப்படல. நீ அழக இருக்கனு நினைக்கல. ஆனா அது எல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு?’ என தாம்பரம் ரயில்வே நிலையத்தில் ஷாலினியிடம் மாதவன் சொன்ன டயலாக் காலம் கடந்து இன்று நிற்கிறது. 
 
image
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சுஹாசினி மற்றும் மாதவன், மணிரத்னம் இடையே ஒரு உரையாடல் நடந்தது.  அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ‘ஆயுத எழுத்து’ படத்தின் போது மாதவன், இயக்குநர் மணிரத்னத்தைப் பார்க்க கோல்ப் பேட் உடன் வந்தாராம். அதற்கு மணிரத்னம், ‘ஏன் வயசானவங்க ஆட வேண்டிய விளையாட்டை இவர் விளையாடுகிறார்?’ எனக் கேட்டாராம். அதனை இந்த உரையாடலின் போது கூறி மூவரும் கலாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த உரையாடலின் போது மாதவன், இயக்குநரை பார்த்து ‘எங்க நீங்க விளையாடுங்க பார்க்கலாம்?’ எனப் பதிலுக்குக் கிண்டல் செய்தார்.
 
image
 
மேலும் மாதவன், “ அலைபாயுதே போது நீங்க சொன்னது நினைவு இருக்கு. நீ நடிகர் மட்டும் இல்ல. நீ முதலில் சினிமாவின் ஒவ்வொரு நுட்பத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றீர்கள் ஆகவேதான் அந்தப் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். உங்களைப் படப்பிடிப்பு தளத்தை விட்டால் சினிமவை பற்றி வேறு எங்கும் கற்க முடியாது என்ற மாதவன், உங்களது சினிமாவின் கருத்தியல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  உங்கள் படத்தின் வசனங்கள் ஒரு ஐகானிக். ஒருவரியில்தான் அது இருக்கும். ஆனால் அதை அடித்துக் கொள்ள முடியாது. குறிப்பாக ‘நாயகன்’. அதில் ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’ ரொம்ப பிடிக்கும். அலைபாயுதே படத்தில் ‘நான் உன்ன விரும்பல’. நீங்க ஒரு யதார்த்தமான இயக்குநர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.