ராமநாதபுரத்தில் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தர்ஹாவலசையில் இருந்து தர்மலிங்கம் என்பவரது நாட்டுப் படகில் ஏழு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர் சீனி மைதீன் பீர்ஒலி (23) என்பவர் கடலில் தவறி விழுந்துள்ளர். இதனைக் கண்ட சக மீனவர்கள் கடலில் விழுந்த மீனவரை அரை மணி நேர தேடுதலுக்கு பின் மீட்டனர்.
மீனவர் சீனி மைதீன் பீர்ஒலிக்கு சுயநினைவு இல்லாததால் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
வேன் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி: 14 பேரை மடக்கிப்பிடித்த போலீசார்!
இதனையடுத்து உடல் கூறு ஆய்வுக்காக மீனவரின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மண்டபம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருந்திய நாட்டுப்படகுகள் மூலம் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் எனவும் விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM