தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இது குறித்து வேம்பார் கடலோர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன். நாட்டுப்படகு மீனவர் ஆன இவர் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 22 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்துள்ளார். இன்று முதல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசு அனுமதி கொடுத்துள்ளதால் இன்று சுதர்சன் தனது நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்று உள்ளார்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அருகில் இருந்த மீனவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சுதர்சன் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த சுதர்சனுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன. கடந்த 22நாள்கள் மீன்பிடிக்க செல்லாத காரணத்தினால், மனவேதனையில் இருந்த சுதர்சன் என்று காலையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அங்கு எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காததால் வேதனையடைந்த சுதர்சனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேம்பார் கடலோர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் 13 வயது சிறுமி உட்பட 7 பேருக்கு கொரானா உறுதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM