தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இருப்பினும் நேற்று குறைவான எண்ணிக்கையிலே நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா நோய் பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். கொரோனா நோய் தொற்றால் இன்று மேலும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.
#BREAKING சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு https://t.co/d7m1NFB8zz
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 15, 2020
அத்துடன், மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.