(கோப்பு புகைப்படம்)
கொரோனா ஆபத்தானதுதான் என்றாலும் ஆட்கொல்லி நோய் அல்ல என்று ஆணித்தரமாக கூறுகிறார் அந்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர். கொரோனாவை நிச்சயம் வெல்லலாம் என்ற நம்பிக்கையோடு புதிய தலைமுறைக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “துபாயில் இருந்து சென்னை வந்தேன். சென்னையில் இருந்து காரில் எனது சொந்த ஊருக்கு சென்றேன். எனக்கு 2 நாட்கள் எந்த அறிகுறியும் இல்லை. அதன்பின்னர், எனக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி எல்லாமே இருந்தது. நான் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டேன். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மார்ச் 22 ஆம் தேதி எனக்கு கொரோனா என்று சொன்னதும் மருத்துவமனையில் அட்மிட் ஆகிட்டேன். இரண்டு நாட்கள் பயத்துடனேயே நகர்ந்தது.
அதன் பின்னர் எதுவாயிருந்தாலும் பரவாயில்லை, பார்த்துக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். இதற்கு மாத்திரைகள் மட்டும் கொடுப்பார்கள். வேற சிகிச்சையே கிடையாது. மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். எனது நண்பர்கள், குடும்பத்தினர் என்னிடம் பாசிட்டிவ் ஆக பேசினர். அந்த காரணத்தினால் மட்டும் தான் என்னால் இதிலிருந்து மீண்டு வர முடிந்தது.
திருச்சி மாநகரில் 437 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா என்று சொன்னதும் ஒதுக்கி விடுகிறார்கள். அவ்வாறு செய்யாமல் இருந்தாலே போதும். நான் முதல் நாள் ஆம்புலன்ஸில் ஏறும்போதே எனக்கு பாசிட்டிவ் என வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் செய்தி வருகிறது. ஆனால் அப்போது எனக்கு எதுவுமே கிடையாது. அடுத்த நாள் தான் எனக்கு பாசிட்டிவ் என சோதனையில் வருகிறது. அதனால் இதுபோன்று தவறான செய்தியை பரப்புவதை செய்யக் கூடாது. என் குடும்பத்தில் குழப்பத்தை ஆழ்த்தி விட்டார்கள். சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் தொந்தரவு கொடுக்காமல் நம்பிக்கை கொடுத்தாலே போதும். அவர்கள் மீண்டு வந்து விடுவார்கள்.
கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் பயந்து கொண்டு வீட்டிலேயே இருப்பார்கள். அது ஒருவருக்கு மட்டும் தொற்றாது. அனைவருக்கும் தொற்றும். எனவே அறிகுறி தெரிந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள். பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அது சாதாரண பரிசோதனைதான். எங்கள் வீட்டில் 120 பேருக்கு பரிசோதனை செய்தோம். அனைவருக்கும் நெகட்டிவ் தான்.
வேன் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி: 14 பேரை மடக்கிப்பிடித்த போலீசார்!
நானும் சமூக வலைதளங்கள், செய்திகளில் வருவதை பார்த்து பயந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் நம்பிக்கையுடன் சரியாகிவிடும் என்று நினைத்தேன். மனதில் பிரார்த்தனையும் செய்துகொண்டேன். பலரிடம் பாசிட்டிவ் வார்த்தைகளை கேட்டேன். தற்போது எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கொரோனாவிலிருந்து மீண்டு விட்டேன். யாருமே எனக்கு நெகட்டிவ் எண்ணத்தை கொடுக்கவில்லை. இதுதான் நான் மீண்டு வர காரணம்.” எனத் தெரிவித்தார்.