கொரோனா வைரஸ் காரணமாக பிரட்டன் முழுமுடக்கத்தில் உள்ளதால் குழந்தையை பெற்றெடுத்தல், அதனை பராமரித்தல் ஆகியவற்றை தாய்மார்கள் தனியாகவே செய்யும் அளவிற்கு தங்களை தயார்படுத்தி கொண்டுள்ளனர்.
பிரிட்டனில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு உதவுவதற்காக, சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளை பராமரிப்பது குறித்து தொலைப்பேசி மூலம் அறிவுரை வழங்கப்படுகின்றன. இதனால், பெண்கள் யாருடைய உதவிகளும் இன்றி தங்களது குழந்தைகளை கூடுதல் கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தும், பிரட்டனில் கர்ப்பிணிகள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பிரசவத்தின் போது மட்டும் கணவர்கள் உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிலையும் மாறக்கூடும் என்பதால் குழந்தை பெற்றெடுத்தலை தனித்து சந்திக்க கர்ப்பிணிகள் மனதளவில் தயாராகி வருகின்றனர்.