உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. அரசுகளும், பொதுமக்களும் கொரோனாவை விரட்ட கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை அரசுக்கும், சக மக்களுக்கும் செய்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் கொல்கத்தாவில் முதியவர் ஒருவரின் செயல் இணையத்தில் பாராட்டுகளை குவித்துள்ளது. இது குறித்து தி குயிண்ட் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

image

அதன்படி, சாருதத் என்ற நபர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிகழ்வை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது. கொல்கத்தாவில் தனியாக வசித்து வரும் 82 வயதான சுபாஷ் சந்திரா என்ற ஓய்வுபெற்ற பேராசிரியர், தன்னுடைய வீட்டிற்கு வெளியே ஊரடங்கு காவல்பணியில் இருந்த போலீசாரை அழைத்துள்ளார்.

முதியவர் ஒருவர் அழைத்ததும், ஏதோ உதவி தேவைப்படும் என நினைத்து போலீசாரும் விரைந்து சென்றுள்ளனர். ஆனால் கையில் இருந்த காசோலை ஒன்றில் ரூ.10ஆயிரம் தொகையை நிரப்பிய முதியவர் இந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டுள்ளார்

image

ஏதோ உதவி கேட்கப்போகிறார் என எதிர்பார்த்த போலீசாருக்கு பண உதவி செய்த முதியவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு ஆன்லைனில் பணம் அனுப்ப தெரியாது என்பதால்தான் உங்களை அழைத்தேன். தொந்தரவு செய்ததற்கு மன்னித்து விடுங்கள் என போலீசாரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான 1பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

சுபாஷ் சந்திரா போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் நம்மை மேலும் ஊக்கப்படுத்தி கொரோனாவுக்கு எதிராக போராட வைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

 கொரோனாவை விரட்ட இந்திய அரசு கையில் எடுக்கும் பிளாஸ்மா தெரஃபி சிகிச்சை..!

 Courtesy: https://www.thequint.com/neon/social-buzz/82-yr-old-kolkata-man-donates-for-covid-19-wins-hearts

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.