முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

image

ஏப்., 20-க்கு பிறகான தளர்வுகள்.. எவையெல்லாம் இயங்கலாம்..? எதற்கெல்லாம் தடை..?

தமிழகத்தில் சென்னை உட்பட பலப் பகுதிகளில் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து செல்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, 6 மாதத்திற்கான வாகன ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.