கொரோனா கட்டுக்குள் வந்த பகுதிகளில் ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
கொரோனா பாதிப்புக்கு பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 4-வது முறையாக இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகளை பிறநாடுகள் பாராட்டியுள்ளன, ஊரடங்கால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.
எனவே கொரோனாவை தடுப்பதற்காக மே 3வரைஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், ஏப்ரல் 20-ம் தேதி வரை கண்டிப்புடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்த பகுதிகளில் சில தளர்வுகள் செய்யப்படும். தளர்வுகளுக்கு பிறகு கொரோனா மீண்டும் பரவினால் நிச்சயம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM