ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், டாஸ்மாக் கடைகள், பார் உடன் இணைந்திருக்கும் கடைகள் என அனைத்து கடைகளும் திறக்கப்படக் கூடாது என்று மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடைகள் திறக்கும் நேரம் மாற்றம் – வேலூர் மாவட்ட ஆட்சியர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM