தனக்கு தெரிந்த வரையில் கிரிக்கெட் வரலாற்றில் தோனி மட்டுமே சிறந்த ஃபினிஷர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கள் ஹசி தெரிவித்துள்ளார்.

image

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்பு இந்திய அணியின் தோனி, சர்வதேச கிரிக்கெட் ஏதும் விளையாடவில்லை என்றாலும் அவரைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. அதுவும் தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என்று பலரும், அவர் ஓய்வை அறிவிக்கக் கூடாது என்று சிலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி ஐபிஎல் போட்டிகளை குறிவைத்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

image

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவருமான மைக்கல் ஹசி, தோனி குறித்த தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துள்ளார். கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்காக வீடியோ கால் மூலம் சஞ்சய் மஞ்சரேக்கர் எடுத்தப் பேட்டியில் “உலக கிரிக்கெட் வரலாற்றில் தோனி மட்டுமே சிறந்த ஃபினிஷர். என்னுடைய இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தலாம். ஆனால் கிரிக்கெட்டில் தோனிக்கு முன்பு கூட சிறந்த பினிஷர்கள் இருந்தார்கள். ஆனால் தோனியளவு அமைதியானவர்களாக இருந்ததில்லை” என்றார்.

image

மேலும் தொடர்ந்த மைக்கல் ஹசி “நான் பார்த்த பினிஷர்களில் தோனியிடம் இருக்கும் பவர் வேறு எந்த வீரர்களிடமும் நான் கண்டதில்லை. தோனிக்கு எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டுமென நன்றாகவே தெரியும், அதை செய்தும் முடிப்பார். தோனியிடம் இருக்கும் அமைதி மனோதிடம் ஆகியவற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மேலும் தோனியிடம் இதுபோன்ற பல நல்ல விஷயங்களை அவருடன் விளையாடிய காலக்கட்டத்தில் நான் தெரிந்துக்கொண்டேன். அவர் எந்தக் கடத்திலும் பதற்றப்பட்டுக் கூட நான் ஒருபோதும் பார்த்ததில்லை” என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.