கொரோனோ சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா நோய் தொற்றிற்கான சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது. அதனால், தற்போது, சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
10 லட்சம் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. லாவோஸ்(157), நைஜிர்(182) மற்றும் ஹோண்டரஸ்(162) ஆகிய நாடுகளின் நிலையில்தான் உள்ளோம். பெரிய அளவிலான சோதனைகள் தான் (Mass testing) வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான விஷயம். ஆனால், அந்த முயற்சியில் தற்போது நாம் இல்லை” என்று கூறியுள்ளார்.
India delayed the purchase of testing kits & is now critically short of them.
With just 149 tests per million Indians, we are now in the company of Laos (157), Niger (182) & Honduras (162).
Mass testing is the key to fighting the virus. At present we are nowhere in the game.
— Rahul Gandhi (@RahulGandhi) April 14, 2020
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. அதனால், ரேபிட் கிட் உபகரணங்களை கொண்டு அதிக அளவில் சோதனை நடத்த வேண்டும் என்று நிபுணர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீனாவில் இருந்து வரவேண்டிய ரேபிட் கிட் உபகரணங்கள் இன்னும் வரவில்லை. நாளைக்குள் வந்துவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி சோதனை உபகரணங்களை வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM