தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவியபோது, அது வெளவால்களில் இருந்து பரவியது ஆய்வுகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று தற்போது கொரோனா வைரஸ் பரவலை கண்டறிய வெளவால்களுக்கு ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, முதல் கட்ட ஆய்வில் வெளவால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது. வெளவால்கள் மட்டுமின்றி, நாய், பூனை மற்றும் கோழி உள்ளிட்டவற்றிற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது அச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.