திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் 969ல் இருந்து 1075 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
அத்துடன் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருச்சியில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் ஒரு வயது குழந்தையும் அடங்கும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே சிகிச்சை பெற்று வரும் தந்தையின் மூலம் குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்
நாகையில் தனியார் மருத்துவருக்கு கொரோனா : சிகிச்சை பெற்றவர்களுக்கு அழைப்பு..