கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ரூ.5 கோடி கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகில் 18,65,015 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,138 பேர் உயிரிழந்துள்ளனர். 4,331,915 பேர் சிகிச்சை பலன் பெற்று குணமடைந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை 9,240 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். 1,096 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க கூடுதல் நிதி தேவை என்பதால் மத்திய, மாநில அரசுகள் பொது நிவாரணம் வழங்குமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளன. அதையேற்று பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், பிரபலங்களும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ரூ.5 கோடியை இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். முன்னதாக, 800 மில்லியன் அமெரிக்க டாலரை கூகுள் நிறுவனம் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் மற்றும் சிறு தொழிலாளர்களுக்கும் அளிக்கப்பட்ட 200 மில்லியன் டாலரும் அடங்கும்.
வீட்டு மாடியில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் – போலீஸ் விசாரணை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM