பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வறுமையில் வாடும் பல ஏழைகள் உணவுக்கே வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.Tamil Nadu CM Edappadi K Palaniswami leaves for three-nation tour ...

இதனிடையே தங்களால் முடிந்த நிவாண நிதியை அரசுக்கு அளிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி சினிமா பிரபலங்கள் உட்பட பலர் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அன்றாட ஏழைகளுக்கு உதவும் வகையில் உணவுப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.

ஆனால், வறுமையில் வாடும் ஏழைமக்களுக்கு உதவுதாக கூறிக்கொண்டு தனியார் அமைப்புகள், நபர்கள், கட்சிகள் போன்றவை நேரடியாக உதவி செய்யக்கூடாது என தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Results Of By-Polls In 22 Assembly Constituencies Hold Key To ...

திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா!

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவ அரசு தடை விதித்தற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.