இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,52,533 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,14,201 ஆகவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,12,808 ஆகவும் உள்ளது.
திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா!
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 716 லிருந்து 857 ஆக உயர்ந்துள்ளது.