9,000-த்தைத் தாண்டிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,000-த்தைத் தாண்டியது. அந்த எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல், கொரோனாவால் உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 857 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

இந்தநிலையில், ஊரடங்கு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டாவது ஊரடங்கில் தொழிற்சாலைகள் இயங்க கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது உள்ளிட்ட உத்தரவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#GameCorner

கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.